நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா…? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன். நேருக்கு நேர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பல திரைப்படங்களில் நடித்து மக்களை தன் பக்கம் இழுத்தார். பிதாமகன், மாயாவி , சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி பல குழந்தைகளுக்கு கல்விக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இவரின் சூரரைப் போற்று , ஜெய் பீம் போன்ற பல வெற்றி படங்கள் மக்களால் கொண்டாடப்பட்டது. சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இவர் பிரபல நடிகையான ஜோதிகா உடன் படங்களில் நடித்து வந்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. முதலில் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் பின்னர் சம்மதித்ததால் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.

ஜோதிகா பல வெற்றி படங்களை தந்தத்திருந்தாலும் திருமணத்திற்கு பின் பல ஆண்டு இடைவெளி கொடுத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். 36 வயதினிலே, ஜாக்பாட், ராட்சசி, காற்றின் மொழி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் சூர்யாவும், ஜோதிகாவும் தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வார்கள். தற்போது மனைவியுடன் ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..