நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு தேம்பி அழுத கல்லூரி மாணவிகள் , என்ன சொன்னார் தெரியுமா .?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதையால் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சில உத்தரவுகளும் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.

மறுபக்கம் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் போதை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முன்பு போதைப்பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் அதற்கு அடிமையாகி தங்களது வாழ்வை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வபோது கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் தாமு கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,போதையில் சிக்கும் மாணவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்களையும் விரிவாக எடுத்துரைத்து பேசினார். அவரின் ஒவ்வொரு பேச்சையும் கேட்க கேட்க அங்கிருந்த மாணவிகள் தங்களையும் மறந்து தேம்பி அழுதனர். அதன் பிறகு மாணவிகள் அனைவரும் உணர்ச்சி பெருக்குடன் போதை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*