நடிகர் விக்ரமின் தங்கையை பாத்திருக்கீங்களா… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….அச்சு அசலாய் விக்ரமை போலவே உள்ளாரே ……..

‘சியான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தமிழ் திரை உலகில் கால் பதித்தார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது போன்ற எண்ணற்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த இவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்கள் நலனுக்காக பல சமூக நலத் தொண்டுகளை தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார். 1984 இல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த நடிகர் விக்ரம் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஜெமினி, கிங், பிதாமகன், கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, தாண்டவம் போன்ற பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தற்பொழுது அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தற்பொழுது கூட அவர் தனது இல்லத்தில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

நடிகர் விக்ரம் அவரது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. நடிகர் விக்ரமுக்கு ஒரு தங்கை இருக்கிறார்.நடிகர் விக்ரமுடைய தங்கை தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விக்ரமைப் போலவே அவரது தங்கையும் இருக்கிறாரே ?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*