நடிகர் விக்ரம் இசைத்த செண்டை மேளம்…. அடினா இதுதான் அடி….கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…. நீங்களே பாருங்க வீடியோ உள்ளே…

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட விழாவில் பங்குபெற்ற நடிகர் விக்ரம் செண்டை மேளத்தை இசைத்துள்ளார்.

பிரம்மாண்டமான வரலாற்று படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா, லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் செண்டை மேளத்தை இசைத்துள்ளார்.

தற்பொழுது இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘அடினா இது தான் அடி’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…