நடிகை ஜோதிகாவை மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் பார்த்திருக்கீங்களா?… அட நம்ம ஜோதிகா வா இது?…வெளியான சிறுவயது புகைப்படம்…. நீங்களே பாருங்க..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது நடிப்பால் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றோருடன் நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருந்தார்.

நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் நடிப்பில் ஜானி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு போன்ற படங்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. இவர் 2018ல் மரணம் அடைந்தார். இது அவருடைடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்பொழுது நடிகை ஸ்ரீதேவியுடன் பிரபல நடிகை ஜோதிகா தனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ஜோதிகா மட்டுமில்லை அவருடைய சகோதரிகள் நக்மா மற்றும் ரோஷினி போன்றோரும் உள்ளனர். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட நம்ம ஜோதிகாவா இது? சின்ன வயசுல இவ்வளவு அழகா இருக்காங்களே?’ என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*