நடிகை ஸ்ரேயா-வின் மகளா இது..? நன்கு வளந்துவிட்டாரே… அவரே வெளியிட்ட மகளின் புகைப்படம்…

2003 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இதை தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ திரைப்படத்தில் நடித்தார். நடிகர் ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகைகளிள் ஒருவரானார். உத்தமபுத்திரன், குட்டி, ஜக்குபாய், திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

தனது மகள் மற்றும் கணவருடன் ஐரோப்பாவிற்கு பிக்னிக் சென்றுள்ள ஸ்ரேயா அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*