
நடிகர் ரோபோ சங்கர், சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளியான தீபாவளி திரைப்படத்தின் மூலம் சினிமா திரைக்கு அறிமுகமானார்.
இவர் தமிழ் சினிமாவில் தனுஷின் மாரி,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படங்களில் பயணத்தை தொடங்கி இரவின் நிழல் மற்றும் லெஜெண்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியுள்ளார்.
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “கோப்ரா” திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இவரை அனைவருக்கும் காமெடியனாக மட்டும் தான் தெரியும். ஆனால் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாடி பில்டராக இருந்தார் என்பது பலரும் தெரியாத ஒன்று.
அவர் பாடி பில்டராக மிஸ்டர் மெட்ராஸ் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார். அவரின் பாடி பில்டிங் புகைப்படங்களை விஜய் டிவியின் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் காட்டியுள்ளனர்.அதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்து தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Leave a Reply