
மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் ஜெயராம். இவர் மலையாள மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களான தெனாலி, துப்பாக்கி மற்றும் பஞ்சதத்திரம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல் எட்டு ஏக்கர் நிலத்தில் விவசாயமும் செய்து வருகின்றார். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது சொந்த நிலத்தில் விவ சாயத்தையும் பார்த்து வருகின்றார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாய தின விழாவில் சிறந்த விவசாயிக்கான விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ் விழாவில் பேசிய நடிகர் ஜெயராம், உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை விட,
இந்த விவசாயி விருது கிடைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர் முதல்வர் கையால் விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறந்த விவசாயி விருது பெற்ற ஜெயராமுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…
Leave a Reply