“நண்பா செம்மையா டான்ஸ் ஆடுற”…. விஜய் என்கிட்ட அப்படி பேசினாரு…. பாக்கியலட்சுமி எழில் வைரல் வீடியோ…

சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் எழில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் விஜே விஷால். இந்த சீரியலின் மூலம் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

விஜேவாக இருந்த இவர் தற்போது ஹீரோவாக மாறி உள்ளார். விஷால் முதன் முதலாக விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்த இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் சினிமாவில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அந்த சீரியலில் கதாநாயகனாக இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் பல பெண்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார். அதில் தனது அம்மாவின் மனதை புரிந்து கொண்டு செல்ல மகனாக நடந்து கொள்வதாலேயே பல ரசிகர்களுக்கும் இவரை பிடித்து விட்டது. இவர் விஜய் நடிப்பில் பெரிய அளவில் வெற்றி அடைந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் படத்தில் பாதி வரைக்கும் நடித்துள்ளார். ஆனால் இவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படத்தில் இருந்து விலகினார். அதனைப் பார்த்து விஜயும் இவரை திட்டியுள்ளார். உடம்பு தான் முக்கியம் அதை முதலில் கவனி என்று அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே விஜய் தன்னிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டார் என்பது குறித்து ஒரு பேட்டியில் விஷால் பகிர்ந்து உள்ளார். அந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*