நான் சினிமாவை விட்டு விலகுகிறேன்…. திடீரென சந்நியாசியான பிரபல நடிகை…. ரசிகர்கள் ஷாக்…

கடந்த 27 ஆண்டுகளாக திரை துறையில் இருந்த இந்தி நடிகை நுபுர் அலங்கர், சினிமாவை விட்டு விலகி சன்னியாசியாகி உள்ளார். ராஜா ஜி, சாவரியா,சோனாலி கேபிள் போன்ற படங்களிலும் சக்திமான் உள்ளிட்ட ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

சுமார் 27 வருடங்களாக நடித்து வரும் இவருடைய கணவரும் நடிகர் தான். தற்போது 49 வயதாகும் நடிகை நுபுர் அலங்கர், சினிமாவில் இருந்து விலகி சன்னியாசி ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் கடந்த பிப்ரவரி மாதம் சன்னியாசி ஆகிவிட்டேன். தற்போது புனித யாத்திரைகளுக்கு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

 

 

 

தேவையானவர்களுக்கு உதவி செய்கிறேன். எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்தது. ஆனால் இப்போதுதான் என்னை முழுமையாக ஆன்மீகத்தில் அர்ப்பணித்துள்ளேன். இது என்னுடைய விருப்பம். இனி என் வாழ்க்கையில் சினிமா இல்லை.நான் நடித்துக் கொண்டிருந்தபோது புகழ் மற்றும் வெற்றி பற்றி கவலை பட்டேன். ஆனால் இன்று எந்த கவலையும் இல்லாமல் நான் நிம்மதியாக இருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் அனைத்து எதிர்பார்ப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் நான் விடுபட்டு விட்டேன். நான்கு ஜோடி உடைகள், ஒரு ஜோடி செருப்பு, தினமும் சாப்பிடுவதற்கு ஒரு பச்சை பப்பாளி மற்றும் ஆப்பிள் சாப்பிடுவது என என்னுடைய வாழ்க்கை முறையை நான் எளிமைப்படுத்திக் கொண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவர் திடீரென இந்த முடிவு எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*