
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் துறைமுகத்தில் நடந்த படைப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார். அதனால் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் விஜயின் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க 80களில் கலக்கிய டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருந்த மைக் மோகன் அவர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் மைக் மோகன் நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் எனக் கூறி அப்படத்தை மறுத்து விட்டாராம். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மைக் மோகன் ஹரா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply