
இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்லப் பிராணிகள் மீது அதிக அன்பு செலுத்தி வருகிறார்கள். மேலும், செல்ல பிராணிகளும் குடும்பத்தில் ஒரு அங்கம் வகிக்கின்றன.குடும்ப உறுப்பினர்களை பார்த்துக் கொள்வது போலவே செல்ல பிராணிகளையும் அன்புடன் பார்த்துக் கொண்டு வளர்த்து வருகிறார்கள். அவ்வகையில் தற்போது ஒரு செய்தியை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகையான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நாயை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8,12,555 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாயை கொண்டு வந்து கொடுத்தால் அல்லது தகவலை ஏதாவது கொடுத்தால் எந்த கேள்வியும் கேட்காமல் பத்தாயிரம் டாலர்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram