“நீங்க உங்க அக்கா போல ஆவிங்களா”…. சாய் பல்லவியின் தங்கை சொன்ன பதில்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இவரரின் நடிப்பில் அண்மையில் வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே பரபரப்பு கருத்துகளுக்கு பெயர் போனவர் சாய்பல்லவி என்றால் அவருக்கு சளைத்தவர் அல்ல அவரின் தங்கை பூஜா கண்ணன். இவர் 2021 ஆம் ஆண்டு வெளியான சித்திரை செவ்வானம் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். இவர் நடித்த சித்திரை செவ்வானம் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் பின்னணியில் இருந்து உருவானது.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து பூஜா கண்ணன் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பூஜாவின் ரசிகர்கள் பலர் சாய்பல்லவி போல மருத்துவர் ஆவாரா என கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு சரி படாத எதையும் நான் செய்ய மாட்டேன் என்று தன் அக்காவை போலவே சிரித்தபடி பதில் அளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*