
தமிழ் திரை உலகில் ரசிகர்களை வெகுவாக இருக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் தான் நிக்கெத் பொம்மி ரெட்டி. இவர் ஆரம்பத்தில் சில குறும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தார். பின்னர் தெலுங்கில் யுத்தம் சரணம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரை உலகில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சமந்தா நடிப்பில் வெளியான யூ டர்ன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். குறிப்பாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி அண்மையில் ஐந்து தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரை போற்று திரைப்படத்திற்கு மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர்.
கடைசியாக தெலுங்கில் நாணி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்த சமீபத்தில் வெளியான அண்டே சுந்தரனக்கி திரைப்படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடைபெற்று உள்ளது. அதாவது பிரபல ரேடியோ ஜாக்கியான ஆர் ஜே மெஸ்ஸி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மெஸ்ஸி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply