“பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்”….. ரவீந்திரர் – மஹாலஷ்மி திருமணம் பற்றி Cool சுரேஷ்-இன் பரபரப்பு பேச்சு…..

லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் ராஜலட்சுமி மகாலட்சுமி திருமணம் செய்தது முதல் அவர்களுடைய திருமணம் பற்றிய தகவல்கள் தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ என பரவி வருகிறது. இந்நிலையில் Cool சுரேஷ் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் இவர்களது திருமணம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை ராஜலட்சுமி திருமணம் திடீரென நடந்தது. எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்த இந்த திருமணத்தில் எந்த திரை பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை. இன்றைய சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் இவர்களது திருமணம் தான்.

காசுக்காக தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தரப்பினரும் இல்லை காதலித்து மனம் ஒத்து தான் திருமணம் செய்து கொண்டோம் என்று இவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பேட்டிகளை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் Cool சுரேஷ் பேட்டி ஒன்றில் அவரிடம் ரவீந்தர் மகாலட்சுமி அவர்களின் இரண்டாவது திருமணம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். பாதாம், பிஸ்தானு எது வேணா சாப்பிடுவான். நமக்கு என்ன? நீங்க வேணும்னாலும் ரெண்டு திருமணம் செஞ்சுக்கோங்க.யார் உங்களைக் கேட்க போறா.

ஒன்ன வெச்சே நம்மளால சமாளிக்க முடியல’, என்று நக்கல் அடித்து பேசியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ Cool சுரேஷ் பேசியுள்ள அந்த அந்த வீடியோ உங்களுக்காக….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*