பல கெட்டப்பில் பட்டைய கிளப்பிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் RARE போட்டோ உள்ளே ..

திரை நட்சத்திரங்களில் வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி மற்றும் சிம்ம குரலோன் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் இவர்தான். திரை துறையில் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவிலியர் விருதும் பெற்றவர் இவர்தான். தண்ணி கரட்ட கலைத்திறனால் நாட்டு மக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒரு சேர நிறைந்தவர் இவர். தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர்.

இவரின் நடிப்பில் வெளியான பாசமலர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றவை. இன்றைய முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்துள்ளார். இவர் தனது அனைத்து படங்களிலும் புதுவிதமான கெட்டப்பை போட்டு மக்களை வெகுவாக கவர்ந்தவர்.

அவ்வகையில் நடிகர் சிவாஜி கணேசன் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிப்பில் இவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்று கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*