பாரீஸ் நாட்டில் புது திருமண ஜோடி….. 100-வது நாளில் ஹனிமூன் கொண்டாடும் ஆதி-நிக்கி கல்ராணி…. வைரல் வீடியோ..

தமிழ் சினிமாவில் மிக குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது நடிப்பு மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஆதி. மிருகம் திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.அடுத்தடுத்து ஈரம் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார்.

அதனைப் போலவே நடிகை நிக்கி கல்ராணி வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இதனிடையே பல படங்களில் ஒன்றாக நடித்த ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் கடந்த மே மாதம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே இவர்களுக்கு திருமணம் முடிந்து கலிபோர்னியாவுக்கு ஹனிமூன் சென்றனர்.

அந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இருவரும் தற்போது திருமணமான நூறாவது நாளை பிரான்ஸ் நாட்டில் கொண்டாடி வருகிறார்கள்.பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான இபில் டவர் அருகே ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் அங்கு சென்று ரசித்த இடங்களை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*