கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் பிச்சைக்காரன் திரைப்பட நடிகை , புகைப்படம் உள்ளே ..

தமிழ் சினிமாவில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகை சாட்னா டைட்டன்ஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியாள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை சாட்னா. இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்த சலீம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தார்.ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதை தொடர்ந்து பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட இவர் தான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தின் போது சில பிரச்சனைகள் கிளம்பியதால் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என சினிமாவை ஓரம் கட்டி விட்டு முழுக்க முழுக்க குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் நடிகை சாட்னா. அவர் தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*