
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இன்றும் பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் காமெடி நடிகர் வடிவேலு. இவரின் நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக வலைத்தளங்களின் எப்போதும் இவரது பெயர்தான். ஒரு ட்ரோல் செய்தால் கூட அதில் கட்டாயம் வடிவேலு பெயர் இடம் பெற்று இருக்கும்.
மேலும், பல படங்களில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் வைகைப்புடல் வடிவேலு அவர்கள். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இவரது நடிப்பில் தற்போது நாய் சேகர் returns மற்றும் மாமன்னன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் வடிவேலு நேற்று தனது 62 ஆவது பிறந்த நாளை,
நடிகர் உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடித்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
Leave a Reply