பிரபல பாலிவுட் நடிகருடன் நெருக்கமாக நடிகை குஷ்பூ , ஓஹ் இது தான் காரணமா .?

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை  குஷ்பு . இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனிடையே  நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார். உடல் எடையை குறைத்து குஷ்பூ வெளியிடும் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்யும் பலரையும் குஷ்பூ சரியான பதிலடி கொடுத்து தெறிக்க விட்டு வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் நாயகன் அஜய் தேவ்கனுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை குஷ்பூ வெளியிட்டுள்ளார். என் ஹீரோவை சந்திப்பது ஒரு கனவு நிறைவானது போல இருக்கின்றது. அவர் எனது எளிமை, பணிவு, பூமிக்கு உரிய அணுகு முறையால் என்னை தடுமாற வைத்துள்ளார்.

இது போலி கிடையாது . அவருக்கு உண்மையில் நான் ஒரு ரசிக பெண்மணி. உங்களின் நேரம் மற்றும் அரவணைப்பை என் மீது செலுத்தியதற்கு மிகவும் நன்றி என்று குறிப்பிட்ட புகைப்படங்களை குஷ்பூ இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*