பிருந்தா மாஸ்டரின் கணவன் மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா…? இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்காங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்…உள்ளே…

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் தனது கணவர் மற்றும் மகன்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தனக்கென ஒரு இடம் பதித்தவர் பிருந்தா மாஸ்டர். இவர் பெயர் சொன்னால் தெரியாத ஆட்கள் இருக்க முடியாது அந்த அளவிற்கு பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரும், கலா மாஸ்டரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்த நடன இயக்குனர்கள். பிருந்தா மாஸ்டருக்கு நடிகை குஷ்பு நெருங்கிய தோழியாவார்.

 

இவர் கமலுடன் ‘நம்மவர்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் ‘மல்லி பூ’ பாடல் வெற்றி பெற முக்கிய காரணம் இவரது நடன இயக்கம் தான்.

அதேபோல் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு கூட பிருந்தா மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் நடன இயக்குனராக மட்டுமின்றி ‘ஹே சினாமிகா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். ஆனால் மக்கள் மத்தியில் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.


தற்பொழுது பிருந்தா மாஸ்டர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் விடுமுறையை கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்காங்களா?என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக……