பொன்னி நதி பாடலை பாடிய பிரபல பாடகர் சற்றுமுன் திடீர் மரணம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகாராய் வளம் வந்தவர் தான் பம்பா பாக்யா. இவரின் குரலுக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அப்படி தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலை பாடியவர் இவர்தான்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 என்ற திரைப்படத்தில் புள்ளினங்காள் என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார். இதுவரை ஏராளமான பாடலை பாடியஇவர் சமீபத்தில் வெளியான அன்பறிவு என்ற திரைப்படத்தில் கலங்காத என்கின்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார். இதனிடையே விரைவில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னி நதி பாடல் ஓபனிங் வரிகளை பாடி அசத்தியவர் இவர் தான்.

இந்தப் பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் பம்பா பாக்யா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக உயிரிழந்து விட்டதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*