மகனோடு கொஞ்சி விளையாடும் நடிகை மேகனா ராஜ் , இணையத்தில் வெளியான காணொளியை பாருங்க ..

சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் மேகனா ராஜ். இவர் பிரபல நடிகையாக திகழ்ந்த பிரமிளா ஜோசய் என்பவரின் மகள். இவர் கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 மற்றும் நந்தா நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் கன்னட சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காதலுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிரஞ்சீவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் இவரது இரண்டாவது திருமண வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் , தற்போது அவர் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் காணொளி இணையத்தில் வெளியானது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*