மகாலட்சுமி கையில் இருக்கும் டாட்டூ…. அந்த பெயர் யாரோடதுன்னு தெரியுமா?… வெளியான அதிர்ச்சி தகவல் …

சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர் ரவீந்திரனின் மனைவியுமான மகாலட்சுமியின் கையில் வரைந்திருக்கும் டாட்டூ தற்பொழுது வைரலாகி வருகின்றது. சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்றே.

திருமணம் ஆன நாள் முதலே அவர்களை பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தயாரிப்பாளர் ரவீந்தர் தயாரிப்பில் வெளியான ‘விடும் வரை காற்று’ இந்த திரைப்படத்தில் நடித்ததின் மூலம் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி இருவரும் திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் தான். மகாலட்சுமியின் முதல் கணவர் அணில். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகாலட்சுமி தயாரிப்பாளரின் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது அவர் கையில் வரைந்துள்ள டாட்டூ ஒன்று வைரலாகி வருகிறது. தனது இடது கையில் ‘சச்சின்’ என்ற பெயரை டாட்டுவாக வரைந்துள்ளார் மகாலட்சுமி. சச்சின் என்பது அவருடைய மகனின் பெயர். மகன் மேல் இருக்கும் தாய்ப் பாசத்தால் அவர் தனது மகனின் பெயரை டாட்டூ போட்டுள்ளார்.

மகாலட்சுமி தனது மகனின் சம்மதத்துடன் தான் இத்திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*