
சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்தஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.
ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 12.5 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் அருள் சரவணன் உடன் இணைந்து விஜயகுமார், நாசர், மறைந்த நடிகர் விவேக் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றுடன் திரையரங்கில் 25 நாட்களை நிறைவு செய்து தி லெஜெண்ட் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தற்போது சென்னையில் உள்ள முக்கியமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை லெஜெண்ட் சரவணன் தனது twitter பக்கத்தில், “மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றி “என்று குறிப்பிட்டுள்ளார்.! அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய வெற்றி #TheLegendRunningSuccessfully on #25thDay @DirJdjerry @Jharrisjayaraj @_TheLegendMovie pic.twitter.com/yUPXZQxxsH
— Legend Saravanan (@yoursthelegend) August 21, 2022
Leave a Reply