மறைந்த நடிகர் முரளியின் மனைவி ஷோபா, தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? இணையத்தில் வெளியான போட்டோ…

90 காலகட்டத்தில் ஒரு தனித்துவமிக்க நடிகராக வலம் வந்தவர்மறைந்த நடிகர் முரளி. 1984 இல் வெளிவந்த ‘பூவிலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் முரளி இவரின் நடிப்பில் வெளியான புது வசந்தம், இதயம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

‘கடல் பூக்கள்’ படத்தில் நடித்து தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார். முரளியின் தந்தை சித்தலிங்கய்யா ஒரு தயாரிப்பாளர். இவர் பல படங்களை தயாரித்து உள்ளார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா ,ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவியா என்ற மகளும் உள்ளனர்.

அதர்வா தற்பொழுது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். அதர்வா ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர் முரளி அதிமுகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இவர் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் 46 வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தற்பொழுது முரளி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…..

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*