மறைந்த பிரபல நடிகரான மேஜர் சுந்தர்ராஜன் மகன், இந்த நடிகர் தானா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் மேஜர் சுந்தர்ராஜன். நகைச்சுவை கலைஞர்கள் பலரும் இன்று இவரின் குரலை மிமிக்ரி செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் தனது நடிப்பு திறமையால் நீங்காத இடம் பிடித்தவர். இதனிடையே மேஜர் சுந்தர்ராஜனை பலரும் அறிந்திருந்தாலும்

அவரின் மகன் பற்றி பலருக்கும் தெரியாது. சுந்தர்ராஜன் மகனும் ஒரு நடிகர் தான். அவரின் மகன் கௌதம் சுந்தர்ராஜன் பெரும்பாலான சுந்தர் சி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான இவர் 1991 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான அழகன் என்ற திரைப்படத்தில் கோழி கூவும் என்ற பாடலில் நடனமாடி இருப்பார்.

அது மட்டுமல்லாமல் இதுவரை தமிழில் இருவர், கிரி மற்றும் அரண்மனை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும், “செக்க சிவந்த வானம்” என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் உயர் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*