மாலத்தீவு கடற்கரையில்…. ரசிகர்களை சொக்க வைக்கும் அமலா பால் போட்டோ ஷூட்……!!!!

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால். மலையாள நடிகை ஆன இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

பிரபு சாலமன் இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள் மற்றும் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் முப்பொழுதும் என் கற்பனை, வேட்டை மற்றும் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மூன்று வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை அனுபவித்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த அமலா பால், இறுதியாக கடாவர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதரிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*