மீனாவின் பிறந்தநாளுக்கு வீட்டின் வெளியில் நின்னுகிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணின கலா மாஸ்டர்…. வைரல் வீடியோ…

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சோகத்தில் இருந்து இவரை வெளியே கொண்டு வர அவரின் தோழிகள் பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனது 46 வது பிறந்த நாளை மீனா கொண்டாடிய நிலையில், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய தோழியான கலா master அவர்கள் வீட்டின் வெளியில் நின்றுகொண்டு பாட்டு போட்டு மீனாவிற்கு surprise கொடுக்கும் விதமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Kala Master (@kalamaster_offical)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*