மேடையில் தல அஜித் போட்ட ஸ்டெப்ஸ் ….. அதைப் பார்த்து ரசித்த மனைவி ஷாலினி…. வைரலாகும் அன்ஸீன் வீடியோ …

தல அஜித் மேடை ஒன்றில் பல வருடங்களுக்கு முன்னர் ஆடிய நடன வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தல அஜித். இன்றைய இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார். ஏனென்றால் திரையுலகில் யாருடைய உதவும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதலில் கதாநாயகனாக தெலுங்கில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து அமராவதி, பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே உட்பட ஏராளமான படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அஜித்திற்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்திக் என்ற மகனும் உள்ளனர்.

இவருடைய நடிப்பில் தற்போது ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தினை இயக்குனர் ஹச் வினோத் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியது.

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன் நடன இயக்குனர்களுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மேடையில் ஏறி நடனமும் ஆடினார். இதை கீழே இருந்து பார்த்து, ரசித்து அவருடைய மனைவி ஷாலினி சிரிக்கிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக….