யாரும் இப்படி பண்ணாதீங்க”…. அப்பாவுக்காக ரசிகர்களிடம் விஜயின் மகன் விடுத்த வேண்டுகோள் ….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மையில் நடித்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிலையில் துறைமுகத்தில் நடந்த படைப்பிடிப்பில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார். அதனால் மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் தொடக்கத்தில் இருந்தே இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் கடுப்பான இயக்குனர் வம்சி படக்குழுவுக்கு யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதித்தார்.

இந்நிலையில் நேற்று ராஷ்மிகா மற்றும் விஜய் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சய், தனது ட்விட்டர் பக்கத்தில்,வாரிசு பழத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தனது அப்பாவுக்காக விஜயின் மகன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ள அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*