ரவீந்தர் மஹாலட்சுமி தம்பதியினர் சாமி தரிசனம்……எல்லோரும் நல்லா இருப்போம் ,சந்தோசமா இருங்க…..வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே……

சின்னத்திரை பிரபல நடிகை மகாலட்சுமி லிப்ரா ப்ரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்தர் என்பவரும் காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நாள் முதலே இவர்களது திருமணம் பற்றி சமூக வலைத்தளங்களில் தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மகாலட்சுமி ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.

தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.இவருக்கு முதல் திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது . 6 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. லிப்ரா ப்ரொடக்ஷன் உரிமையாளரான ரவீந்திரனுக்கும் இது இரண்டாவது திருமணம் தான்.தொடர்ந்து இவர்களது திருமணத்தைப் பற்றியும், ரவீந்தரின் உருவம் குறித்தும் அனைவரும் கேலி செய்த நிலையில் அதை எல்லாம் இவர்கள் கண்டு கொள்ளவில்லை.

தற்பொழுது இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.அங்கு அவர்கள் திருச்செந்தூர் முருகனிடம் இருந்து வேல் மற்றும் கொடியை வாங்கும் புகைப்படங்களையும், ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்களையும் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.