“ராஜா ராணி 2” சீரியல் விட்டு விலகிய வில்லி அர்ச்சனா….. இது தான் விஷயமா..? வைரலாகும் பதிவு…

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’. ராஜா ராணி சீரியலில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் நடித்திருந்தனர். சீரியல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ‘ராஜா ராணி சீசன் 2’ எடுக்கப்பட்டது.

இந்த சீசனில் ஆலியா மானசா மற்றும் சித்து ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இந்த சீரியலின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அரச்சனா. இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் இவ்வளவு மோசமான ஒரு பெண்ணா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது. தற்பொழுது ராஜா ராணி சீசன் 2 வில் இருந்து அர்ச்சனா விலகி உள்ளார் அர்ச்சனா.

இதற்கான உண்மை தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதாவது இவர் பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கேற்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரவி வந்தது. இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, ‘தான் ராஜா ராணியில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளதாகவும், அடுத்த இலக்கை நோக்கி தனது பயணத்தை தொடங்க இருப்பதாகவும், பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்பேனா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்றும் கூறியுள்ளார் .உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*