வாரத்தில் சனி, ஞாயிறுகளில் மட்டும்…. மணமகளிடம் கண்டிஷன் போட்டு…. பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்….

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பே மணமகன் மற்றும் மணமகள் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டு கையெழுத்திட்ட பிறகுதான் திருமணமே நடைபெறுகிறது. அதில் தினம்தோறும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறும். அவ்வகையில் உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகு தங்களுடன் கிரிக்கெட் விளையாட நண்பனை அனுமதிக்க வேண்டும் என்று மணமகளிடம் மணமகனின் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டியில் உள்ள கீழப்புதூர் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் . இதனிடையே இவருக்கும் தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது.

அந்த திருமண நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் பத்திரத்துடன் வந்து,திருமணத்திற்குப் பிறகு கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்ற பத்திரத்தில் மணப்பெண்ணை கையெழுத்திட வைத்தனர். இந்த சம்பவம் திருமண விழாவை கலகலக்க வைத்தது. இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*