“வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர்”….. திடீரென நடிகை மீனா போட்ட பதிவு…. மனதை கலங்க வைக்கும் வீடியோ இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இதனிடையே மீனா அறிக்கை வெளியிட்டு வதந்தி பரப்பாதீர் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு சமூக வலைத்தளம் பக்கமே வராமல் இருந்த மீனா சமீபத்தில் தனது தோழிகளுடன் வெளியில் சென்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீனா தனது வாழ்க்கை பற்றி பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் சிறு வயதிலிருந்து தற்போது வரை இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே. எதிர்காலம் நம்மிடம் இல்லை, என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது என்பதை சுட்டிக்காட்டி மீனா இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*