விஜய் டிவியின் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சேட்டைகள்…. வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க….

‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் மீது தண்ணீர் ஊற்றுவதை போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு சீரியலின் ரீமேக் தொடரான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தங்கை காதலித்தவனை திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக் கொள்ளும் அக்காவின் கதை.

தங்கை அவளுடைய காதலனை திருமணம் செய்ய வேண்டுமானால், அக்கா மனநலம் குன்றிய ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் கண்டிஷன். அதற்கு ஏற்றுக் கொண்ட அக்கா மனநலம் குன்றியவரை திருமணம் செய்து கொள்கிறார்.
தற்பொழுது இந்த சீரியலில் வாணிக்கு கல்யாணம் முடிந்துவிட்டது.


மனநலம் குன்றிய ஆகாஷை திருமணம் செய்துள்ளார் வாணி. அவர்களுடைய முதல் இரவில் தங்கை நிலா திட்டமிட்டபடி ஆகாஷ் வாணியின் மீது பாலை ஊற்றுவார். இனி வரும் இக்காட்சியை சூட்டிங் எடுக்கும் பொழுது, அங்கிருந்த ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் மேலும் அந்த வீடியோவில் நாங்கள் மேக்கப் கலைப்பதற்கு இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறோம் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*