விஜய் நடித்த ‘யூத்’ படத்தின் ஹீரோயினா இவங்க .? ஆளே அடையாளம் தெரியலையே !! இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே …

தென்னிந்திய திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று அனைத்து நடிகைகளும் ஏங்கிக் கொண்டுள்ளார்கள் .தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘யூத்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்தில் நடித்த நடிகை ‘ஷாஹீன் கான்’. நடிகை ஷாஹீன் கான் தமிழ், தெலுங்கு ,கன்னடம், ஹிந்தி இன்னும் பழமொழிகளில் பேசக்கூடியவர். பள்ளி படிப்பை முடிக்கும் பொழுதே மாடலிங் செய்து கொண்டிருந்தார். ‘ஃபேரன் லவ்லி’ விளம்பரத்தில் நடித்து மிகப் பிரபலமானார்.

முதன் முதலாக தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நவ் தவழு’ என்ற படத்தில் நடித்தார். பிறகு விஜய் உடன் இணைந்து 2002 ஆம் ஆண்டு யூத் படத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த இவர் தமிழில் அடுத்த பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார் .

தமிழில் இவர் நடித்த ஒரே படம் யூத் மட்டுமே. நடிகை ஷாஹீன் கான் மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக ….

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*