விமான நிலையத்தில் மயக்கம்… தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு…. வெளியான ஷாக் நியூஸ்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான்.

பல முன்னணி இயக்குனர்கள் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே நல்ல கருத்து கதை கரு கொண்ட படங்களாக தான் இருக்கும். இவர் சமீபகாலமாக ஒரு சில படங்களில் கூட சித்திர வேதங்களில் நடித்து வருகின்றார். அவ்வகையில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுசுக்கு தாத்தாவாக இவர் நடித்துள்ளார்.

 


இந்நிலையில் தற்போது பாரதிராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னையிலிருந்து மதுரை சென்ற அவர் விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அதனால் அங்கு கூட்டம் கூடியது.

பின்னர் உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*