ஸ்பெயினில் நயன் – விக்கி ஹனிமூன் 2.0…. ஏற்பாடு செய்தது இவங்க தான்…. யாருன்னு சொன்னா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர்.அங்கு இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று முன் தினம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் தேசிய கொடியை பிடித்தபடி கொண்டாடினர்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.இதனைத் தொடர்ந்து நயன்தாரா நெற்றியில் ரொமான்டிக் மூடில் காதல் பொங்க விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியானது.அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

இருவரும் தொடர்ந்து ஹனிமூன் படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் இந்த அழகிய சுற்றுலாவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது பிரபல டிவி தொகுப்பாளர் டிடி தான் என விக்னேஷிபன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*