
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் புகழ். அந்நிகழ்ச்சியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறிய இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இருந்தாலும் விஜய் டிவி கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் காமெடிகளுக்கு அளவே இல்லை. அந்நிகழ்ச்சியை தொடங்க இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது சபாபதி, வலிமை, யானை மற்றும் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளும் இவர் கைவசம் வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் வயதான கெட்டப்பில் புகழ் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் இது நம்ம புகழா..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram
Leave a Reply