
சினிமாவில் மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரா லட்சுமணன். கேரளாவை சேர்ந்த இவருக்கு நடிகர் சந்தோஷ் மூலமாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவ்வகையில் மனசெல்லாம் திரைப்படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து பிரபலமான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. மலையாளத் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த சந்திரா லட்சுமணன் தமிழில் ஆதிக்கம் படத்தில் ப்ரியாவாக நடித்தார்.அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது மலையாளத்தில் கோஸ்ட் ரைடர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். மலையாள சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்த இவர் 2006 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வசந்தம்,சொந்த பந்தம் மற்றும் பாசமலர் உள்ளிட்ட சன் டிவி சீரியல்களிலும் மலையாள சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். பின்னர் தனது நீண்ட நாள் காதலரான டோஸ் கிறிஸ்டி என்ற மலையாளத்தில் பிரபலமான சீரியல் நடிகரை தனது 38 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்துடன் தற்போது தெரிவித்துள்ளார்.தனக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களை பதிவிட்டு ஜூனியருக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Leave a Reply