
விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது.
தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் ஆறாவது சீசன் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அந்த வீடியோவில் இருந்து கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களை இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் 10 பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி,
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, நடிகை ஸ்ரீநிதி, நடிகை மனிஷா யாதவ், குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா, நடிகை சில்பா மஞ்சுநாத், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மற்றும் பிஜே அர்ச்சனா உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி நிகழ்ச்சி தொடங்கும் போது தான் அனைவருக்கும் தெரியவரும்.
Leave a Reply