80-களில் கொடி கட்டி பறந்த இந்த பிரபல நடிகையை ஞாபகம் இருக்கா..? இவுங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா….?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வந்தவர்தான் ஒய் விஜயா. ஆந்திராவில் பிறந்த இவர் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லியன பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிப்பையும் தாண்டி இவருக்கு நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் இவர் கிளாசிக் நடன மங்கையாக திகழ்ந்தவர்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பழமொழி படங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த கிளிஞ்சல்கள், ராஜாதி ராஜா மற்றும் தில்லுமுல்லு உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை.

இவர் இறுதியாக பிரியமான தோழி திரைப்படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்தார். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே 1985 ஆம் ஆண்டு அமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற ஒரு மகளும் உள்ளார்.

அவர் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் வசித்து வருகின்றார்.கடந்த 2013ஆம் ஆண்டு அனுஷ்காவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்காமல் விலகி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ஒய் விஜயா.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*