ஒரு குழந்தைக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோம்…. வேதனையை பகிர்ந்த பிரபல தொகுப்பாளினி….!!!

0
42
A famous presenter shared the pain of suffering so much for a child

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் தான் தியா மேனன். தொடர்ந்து கிரேசி கண்மணி, சூப்பர் சேலஞ்ச், வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதுதவிர நேற்று இல்லாத மாற்றம் என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A famous presenter shared the pain of suffering so much for a child 02

இவருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கார்த்திக் என்பவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தைக்காக இவர்கள் பட்ட கஷ்டத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.

A famous presenter shared the pain of suffering so much for a child 03

அதன்படி தியா மேனன் கூறியதாவது, “எனக்கு திருமணமாகும்போது 22, 23 வயது தான் இருக்கும். எனவே, நானும் இவரும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு குழந்தை பெற்று கொள்வதை தள்ளிப்போட்டோம். பின்னர் நாங்கள் நினைத்தபோது எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

A famous presenter shared the pain of suffering so much for a child 04

சுவிட்சர்லாந்து சென்று ஹனிமூன் கொண்டாடி விட்டு வந்தோம். ஆனால் டெஸ்ட் செய்து பார்த்தபோது குழந்தை ஃபார்ம் ஆகவில்லை. ஒவ்வொரு முறை டெஸ்ட் எடுத்து பாசிடிவ் ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் உட்கார்ந்து அழுவேன்.

A famous presenter shared the pain of suffering so much for a child 05

எங்கள் இருவீட்டார் தரப்பிலிருந்து இது குறித்தான கேள்விகள் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும், அவர்களுக்கு தெரிந்தவர்கள் இது குறித்த கேள்விகளை கேட்டுள்ளார்கள். பின் ஒருகட்டத்தில் நடப்பது நடக்கட்டும் என நான் அப்படி விட்டுவிட்டேன். அப்படி ரிலாக்ஸான தருணத்தில்தான் எதிர்பாராத விதமாக நான் கர்ப்பம் ஆனேன்” என கூறியுள்ளார்.