சமூக ஆர்வலர்களுக்கு நன்கொடை வழங்கிய நடிகர் கார்த்தி….. ரசிகர்களிடமிருந்து குவியும் பாராட்டுக்கள்….!!!!!

0
34
Actor Karthi has been showered with praise from his fans for donating to social activists

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தியின் 25வது திரைப்படமான ” ஜப்பான்” கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகியது இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் இனி வரவிருக்கும் படங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெறவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அவருடைய திரை வாழ்க்கை ஒருபுறம் இருக்க, பல சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

Actor Karthi has been showered with praise from his fans for donating to social activists 02

அவருடைய 31வது பிறந்த நாளன்று “மக்கள் நல மன்றம்” என்கின்ற ஒரு புதிய முன்னெடுப்பை துவங்கி, தனது ரசிகர்களை சமூக சேவைகளின் ஈடுபட அவர் ஊக்கப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது, ரத்ததானம் செய்வது, பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுப்பது, வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பைகள் வாங்கிக் கொடுப்பது போன்ற பல முன்னெடுப்புகளை அவர் நடத்தி வருகிறார்.

Actor Karthi has been showered with praise from his fans for donating to social activists 03

மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சிறப்பாக பல விஷயங்களை செய்து வருகிறார் கார்த்தி. இந்நிலையில் கார்த்தி 25 என்ற நிகழ்ச்சி தற்பொழுது நடைபெற்று இருக்கிறது. இதில் சமூக செயல்பாட்டாளர்கள் 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 25 லட்சம் ரூபாய் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Actor Karthi has been showered with praise from his fans for donating to social activists 04

நடிகர் கார்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்று அவர்களுக்கு அந்த பரிசு தொகையை வழங்கி உள்ளார். மேலும் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளுக்காக அவர் ஒரு கோடி ரூபாயை அன்பளிப்பாக வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்க்காக கார்த்திக்கு ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.