திருமணத்திற்கு முன்பே காதலியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவின்…. வைரலாக்கும் ரசிகர்கள்…!!

0
10
actor kavin monika video viral
#image_title

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் வருடம் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் கவின். அதன் பிறகு தாயுமானவன், சரவணன் மீனாட்சி என்ற பல சீரியல்கள் நடித்து வந்தார். திருச்சியில் இருந்து வந்த இவர் நடிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

actor kavin monika video viral
actor kavin monika video viral

அதேபோல வெள்ளி திரையில் காலடி வைத்த இவர் பீட்சா மற்றும் இன்று நேற்று நாளை என்ற படத்தில் சின்ன கதாபாத்திரம் ஒன்ரில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸில் கலந்து கொண்டு பெரிய ரீச் அடைந்தார் கவின். அதன்பிறகு லிப்ட், டாட்டா போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக வளம் வந்தார்.

actor kavin monika video viral
actor kavin monika video viral

இதற்கு அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸில் லாஸ்லியாவை காதலி த்த கவின் வெளியே வந்த பிறகு இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடைய திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

actor kavin monika video viral
actor kavin monika video viral

இந்த நிலையில் கவின் நீண்ட நாட்களாக காதலித்து வந்த மோனிகா டேவிட் என்பவரை கவின் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக செய்தி வெளியான நிலையில் தற்போது மணப்பெண்ணான மோனிகா டேவிட் இன் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் மோனிகா கனா காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ எடிட் ஒன்றை தற்போது நெட்டிசன்கள் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Kavin & Monikca 🥰🥰

https://t.co/q4Ll8ZvTFt

— Venkatramanan (@VenkatRamanan_) August 13, 2023