4 ஆம் ஆண்டு திருமண நாள்… மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் மகத் மனைவி….!!!!

0
36
Actor Magadhs wife shared their 4th wedding anniversary mehndi celebration photos

தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த “வல்லவன்” திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகர் மகத் ராகவேந்திரா. அடுத்தடுத்து காளை, மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, சென்னை 28, மாநாடு, மஹா என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

Actor Magadhs wife shared their 4th wedding anniversary mehndi celebration photos 02

அந்நிலையில் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் மகத்தும் காதலித்து வந்தனர். படங்களில் நடித்துவந்தவர் 2018ம் ஆண்டு பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டார். 70 நாட்கள் வரை வீட்டில் இருந்தவர் பின் வெளியேறிவிட்டார்.

Actor Magadhs wife shared their 4th wedding anniversary mehndi celebration photos 03

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார். படங்களில் பிசியாக நடித்து வந்த மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 2020ம் ஆண்டு இருவருக்கும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணமும் நடந்தது.

Actor Magadhs wife shared their 4th wedding anniversary mehndi celebration photos 04

கடந்த 2021ல் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததை இணையத்தில் பதிவு செய்ததையடுத்து மூன்று வருடத்திற்கு பிறகு மஹத்தின் மனைவி இன்ஸ்டாவில் நான்கு வருடங்களுக்கு முன்பு மெஹந்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.