அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகன்…. சந்தோசத்தின் உச்சத்தில் திளைக்கும் நடிகர் பாண்டியராஜ்….

0
29
Actor Pandyaraj is basking in the joy of being a son who has fulfilled his fathers dream

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Pandyaraj is basking in the joy of being a son who has fulfilled his fathers dream 02

இந்தப் படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் வெற்றி குறித்து நடிகர் ப்ரித்வி பாண்டியராஜன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Pandyaraj is basking in the joy of being a son who has fulfilled his fathers dream 03

அந்த வீடியோவில், கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பிறகு இவருக்கும் சினிமா துறையில் பெரிய அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எந்த அப்பாவும் தனது மகனுக்காக யோசிப்பதைப்போல அவரும் எனக்கு நல்ல வாய்ப்பு வரவேண்டும் என ஆசைப்பட்டிருகிறார்.

Actor Pandyaraj is basking in the joy of being a son who has fulfilled his fathers dream 04

அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது, “ப்ளூ ஸ்டார்” படத்தை பார்த்துவிட்டு அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்போது அப்பாவின் முகத்தில் சந்தோசம் தெரிகிறது. அதை பார்ப்பதற்கே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ப்ரித்வி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.