50 வயதிலும் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்த சித்தாரா… சாமியார் பிடியில் சிக்கிவிட்டாரா…? அதிர்ச்சி கிளப்பிய பிரபலம்..!!

0
19
actrees siththara interview
actrees siththara interview

தமிழ் சினிமாவில்  படையப்பா, முன்னோடி, பெற்றெடுத்த பிள்ளை, பொண்டாட்டியே தெய்வம் நட்புக்காக உள்ள பல படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தாரா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார் . இதனால் அவருக்கு தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

actrees siththara interview
actrees siththara interview

சமீப காலமாகவே இவர் படங்களில் எதுவும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. அது மட்டும் இன்றி 50 வயதாகும் இவர் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இவர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த போட்டோ இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சித்தாரா சாமியாருக்கு அடிமை ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

actrees siththara interview
actrees siththara interview

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நடிகை சித்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர். இவர் நடித்த புது வசந்தம் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்த படம் பலருக்கும் ஒரு தாக்கத்தை கொடுத்தது. இதற்கிடையில் இவர் கேரளாவில் ஒரு சாமியாருக்கு அடிமையாகி விட்டார். அதாவது சாமியாருக்கு வேண்டிய உதவிகளை செய்வது போல முழுமையாகவே சாமியாராக மாறிவிட்டார். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

actrees siththara interview
actrees siththara interview

திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் முதிர் கனியாகவே வாழ்ந்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார் பயில்வான். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகை சித்தாரா தான் ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் நீண்ட நாட்களாக தொடரவில்லை. காதல் கை கூடாத காரணத்தால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.