க்யூட்டாக ப்ரப்போஸ் செய்த நடிகர்…. வெட்கத்துடன் ஏற்றுக்கொண்ட நடிகை எமி ஜாக்சன்…!!!

0
32
Actress Amy Jackson shyly accepted the cute Barapos actor

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். அப்படத்தை தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வந்தார். பின் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நடித்துவந்தவர் பின் மார்க்கெட் குறையவே படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார்.

Actress Amy Jackson shyly accepted the cute Barapos actor 02

தற்போது அருண் விஜய் நடித்த மிஷன் அத்தியாயம் 1 படத்தில் நடித்தார், அப்படமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினருடன் ஈஷா யோகா மையம் சென்றுள்ளார் அந்த இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Actress Amy Jackson shyly accepted the cute Barapos actor 03

சில ஆண்டுகளுக்கு முன்னர் எமிஜாக்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்தார். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அச்சமயம் சிங்கிளாக குழந்தையை வளர்த்து வந்தார்.

Actress Amy Jackson shyly accepted the cute Barapos actor 04

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் ஸ்விட்சர்லாந்தின் பனிபடர்ந்த சூழலில் எமியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். வெட்கத்துடன் அவரது காதலை உறுதி செய்த எமி, அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்துக் கொண்டார். இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதனை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.